டெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை அரியானா, ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாளை டெல்லியை முற்றுகையிடத் தீர்மானித்துள்ள நிலையிலேயே இவ் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டெல்லி நகருக்குள், உழவு இயந்திரங்களுடன் நுழைவதற்கும், துப்பாக்கிகள், எரியக் கூடிய பொருட்கள், செங்கல், கற்கள், பெட்ரோல் கேன்கள் ஆகியவை கொண்டு வருவதற்கும்,அதிகமாக சத்தம் ஏற்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்களைப் பயன் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த உத்தரவை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை ஏராளமானோர் கைதுசெய்யப்படவாய்ப்பு உள்ளதால் 2 மைதானங்கள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.