பணப்பரிமாற்ற நடவடிக்கை சர்வதேச ரீதியில் தெற்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் அடையாளமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண (ருPஐ) சேவைகள் மற்றும் மொரீஷியஸில் ரூபே கார்ட் (சுரீயல உயசன) சேவைகளை ஆரம்பிக்கும் மாநாடு காணொளி மூலம் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் ருPஐ சேவைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
இது சர்வதேச ரீதியில் தெற்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் அடையாளமாகும்.
இந்த முயற்சியால் இலங்கை மற்றும் மொரீஷியஸில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் பயனடைவார்கள்.
இந்த வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது சொந்த நாணயத்தில் குறைந்த கட்டணத்தில் பணம் செலுத்த முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில், சவாலான காலங்களில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் எவ்வாறு உறுதியாக நிற்கிறது என்பதை நாங்கள் சர்வதேசத்திற்கு காட்டினோம்.
டிஜிட்டல் மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னணியில் உள்ளது.
நட்பு நாடுகளுடன் நமது வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா வலுவான முக்கியத்துவம் அளித்துள்ளது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.