நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை புத்தளம் – அனுராதபுரம் வீதியின் குறித்த விபத்து இடம்பெற்றதுடன் காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, நாடாளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.