பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
தேசபந்து தென்னகோனை மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி நியமித்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
ஆனால், இந்த நியமனம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு வெளியாகியிருந்தது.
குறிப்பாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த நியமனம் தொடர்பாக கடுமையான விமர்சனத்தினை முனைவைத்திருந்தார்.
எனினும் தேசபந்து தென்னகோன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
தற்போது யுக்திய நடவடிக்கை நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.