“இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 06.30 kமணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக” சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பமளிப்பதாக சுகாதார செயலாளர் எழுத்துமூலம் உறுதி வழங்கியுள்ளமையை அடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்றும், நேற்று முன்தினமும் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.