நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதே சிறந்ததாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி அந்த பதவியை வகித்துள்ளமையினால் அதன் குறைபாடுகள் தொடர்பில் நன்கு அறிந்துள்ளதாக அவர் கூறியுள்ளதுடன் நாடும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்தியா போன்ற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.