இஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேல் தனது நடவடிக்கைக்காக பிரதிபலனை விரைவில் சந்திக்கும் என்றும் தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது
மேலும் கடந்த நான்கு மாதங்களாக இடம்பெற்றுவரும் இஸ்ரேல்-காசா ஆயுத மோதல் காரணமாக இரு தரப்பிலும் பாரிய அழிவுகள் ஏற்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.