சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 400 ரூபாயை நெருங்கியுள்ளது.
அத்துடன் தம்புள்ளை மற்றும் மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் – நொச்சியாகம – துனுமடலாவ கிராமத்தைச் சேர்ந்த சோள விவசாயிகள் தமது சோளத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ சோளத்தை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதால் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.