நாடாளுமன்றம் அடுத்த வாரம் 3 நாட்கள் கூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடுவது என நேற்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெப்ரவரி 22ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்காக இரங்கல் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.