கான்ஸ்டபிள் தெரிவுக்கான அனுமதிச் சீட்டில் நடிகை சன்னி லியோனின புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான பரீட்சை பல்வேறு மாவட்டங்களில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்நிலையில், பரீட்சை மண்டபத்தில் அனுமதிச் சீட்டு விநியோகிக்கப்பட்ட வேளை பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஒரு அனுமதிச் சீட்டு காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அனுமதிச் சீட்டைக் கொண்டு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் யாரும் தேர்வு எழுத வரவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து யாரோ சிலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.