ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, ஆபிரிக்காவில் தற்போது தமது புதிய தளங்களை நிறுவி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மேற்கு ஆப்ரிக்க நாடுகளை தனக்கு ஏற்ற இடமாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வறுமை மற்றும் உணவுப்பற்றாகுறை காரணமாக ஏற்பட்டுள்ள பட்டினி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போராடி வருகின்ற நிலையில், குறித்த நிலைமைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அந்நாடுகளில் தமது தளங்களை நிறுவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.