பசறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் இன்று பங்கேற்றிருந்த போது, இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதன்போது, குளவிக் கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.