ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் என்பதால். அப்படியான ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஐக்கிய மக்கள் சக்தி, கிராம, தொகுதி உட்பட அனைத்து மட்டங்களிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதுடன் ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், அவர் தேர்தலில் போட்டியிடுவார் என நான் நினைக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப்பெற வேண்டுமாயின் சகல அணிகளையும் இணைத்துக்கொள்வது அவசியம். அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.