ஒருவர் தனிப்பட்ட முறையில் 3 கஞ்சா செடிகள் வரை வீட்டில் வளர்க்கலாம் எனவும் தினமும் 25 கிராம் வரை கஞ்சாவினைப் பயன்படுத்தலாம் எனவும் ஜேர்மனி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz)ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஜேர்மனியில் சமீபக்காலமாக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பாவனை அதிகரித்து வருவதன் காரணமாக கறுப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மால்டா மற்றும் லக்சம்பர்க் நாடுகளை தொடர்ந்து தற்போதுஜேர்மனியும் கஞ்சாப் பாவனையை சட்டரீதியாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.