சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்க உள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.