சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பட்டியிலிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்” சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோககுற்றச்சாட்டில் தண்டனைக்குட்படுத்தப்பட்டவர்கள் இப்பட்டியலில் உள்வாங்கப்படவுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டு நாடாளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 618 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டில் 1, 639 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டில் 13 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் 2023 ஆம் ஆண்டில் 22 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.