தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு, ஏனைய நாடுகளைச்சேர்ந்த முக்கிய நபர்களுக்கு வழமையாக விடுக்கப்படுகின்ற அழைப்பைப்போன்றது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அழைப்பு அசாதாரணமான விடயம் அல்ல எனவும் சந்தோஷ் ஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் இந்தியாவுக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த அழைப்பு தொடர்பாக ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவிருக்கும் ஏனைய வேட்பாளர்களும் இதற்கு முன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர் எனவும், சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.