யாழ், காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 22 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த மீனவர்கள் 22 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.