தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய படைப்பாளிகள் விருதை இந்திய மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இதில் சிறந்த கதை சொல்லிக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.
இதன்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் விருதை பெற்றுக்கொண்ட கீர்த்திகா கோவிந்தசாமி, மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடியிடன் காலில் விழுந்தபோது, பதிலுக்கு பிரதமரும் கீர்த்திகாவின் காலை தொட்டு வணங்கினார். இக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேவேளை சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்கபூர்வமாக சிறந்து விளங்கிய 23 படைப்பாளிகளுக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி விருதுகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.