பெப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழிகளில் 33 வீதத்தை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணைக்கான நிதி கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை பெப்ரவரி மாத இறுதிக்குள் 45 உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும்.
எனினும், 14 உறுதி மொழிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 15 உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது இலங்கை 33 வீத உறுதி மொழியை நிறைவேற்றத் தவறியுள்ளமையை காண்பிப்பதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.