போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரிப்பு தொடர்பான வழக்கில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயற்பட்டவராக விமர்சிக்கப்படுவர் போல்சனரோ.கொரோனா தடுப்பூசி ஏற்றுவதையும் அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கும் தனது மகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக போலியான சான்றிதழ் தயாரிப்பதற்கு போல்சனரோ உத்தரவிட்டார் என ஜெய்ர் போல்சனரோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெய்ர் போல்சனரோ மற்றும் 16 பேருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.