கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024/25 ஆண்டுக்கான வரலாற்றில் முதல் தடவையாக சங்கத் தலைவரை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத் தேர்தலில் ஐ.றைசுல் ஹாதி மற்றும் ஆரிப் சம்சுதீன் போட்டியிட்ட நிலையில் ஐ.றைசுல் ஹாதி அதிகளவான வாக்குகளை பெற்று புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.