• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
14,000 அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்!

14,000 அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/21
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அவஸ்வசும வேலைத்திட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் திறைசேரி என்பன இணைந்து மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளன. அதன் கீழ், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்வாங்கி, கிராம சேவகர் பிரிவொன்றுக்கு 07 பேர் என்ற அடிப்படையில் தெரிவு செய்து, NAITA மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை என்பன இணைந்து வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்தவுள்ளன.

அங்கு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர்-நன்னீர் மீனவக் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்  கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடித் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும். மேலும், பனை,கித்துல், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட கள்ளு அனுமதி வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறன.

இவைதவிர  செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

Related

Tags: அனுப பெஸ்குவ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

Next Post

அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி!

Related Posts

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!
BREAKING

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி
யாழ்ப்பாணம்

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்
இலங்கை

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்
வட மாகாணம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

2026-03-04
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்
இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்

2026-03-04
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

2026-03-04
Next Post
அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி!

அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் - பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி!

மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

0
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

0
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

0
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

0
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

0

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

2026-03-04

Recent News

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.