இலங்கையில் 85 வீதமான மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒக்டோபர் மாதத்தில் 9 சதவீதமாக இருந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் பிப்ரவரியில் 7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது
அத்துடன் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் இருப்பதாக 91 சதவீத மக்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரியவந்துள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதாரம் அழிந்து வருவதாக 90 சதவீதம் பேர் கூறியதாகவும், 9 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் சிறப்பான அளவில் இருப்பதாக கூறியதாக குறிதத அமைப்பு குறிப்பிட்டுள்ளது.