ரபா நகரில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
காசாமீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வி அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ரபா நகருக்குள் தாக்குதலை தொடங்கினால், இஸ்ரேலுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் ரபா நகரில் எந்த ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிகப்பெரிய தவறு எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரபாவில் உள்ள சுமார் ஒன்றரை மில்லியன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தாம் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பைக் முற்றாக ஒழிக்கும் வகையில் காசாவில் தீவிர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதன் அடுத்த கட்டமாக ரபா நகரில் தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.