வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்நிலையில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணி அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரச் செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி வாங்குடன் இன்று கொழும்பிலுள்ள உணவகமொன்றில் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.