கடவத்த எல்தெனிய பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வீசப்பட்டதாக விசாரணை களில் தெரியவந்துள்ளது. இதேவேளை அரசியல் வழிவாங்கல் நடவடிக்கை காரணமாக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதலினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது