இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிற நிலையில் நாளைய தினத்துடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடையவுள்ளது. இதுவரை சுமார் 450 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது