கட்சித் தாவல்களின் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டமே இந்த நாட்டிற்கு தற்போது அவசியமாகின்றது.
அரச செலவீனத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நுட்பமே நமக்கு தேவைப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றது.
இதனூடாக கடன் செலுத்தும் நடவடிக்கையை மாத்திரம் மேற்கொள்ளவுள்ளனர்.
உதாரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையினையே செலுத்தவுள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.