புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்கு இன்றும் நாளையும் விசேட பேருந்துக்கள் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு புகையிரத சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத துறை துணை பொது மேலாளர் என்.ஜே.இடிபோலகே குறிப்பிட்டுள்ளார்.