மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணவீக்கம் 13 சதவீதம் இருந்ததாக சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர்,
தற்போது உலகின் பல பகுதிகளில் போர் நடந்து வருகின்ற நிலையில், உலகத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பணவீக்க விகிதம் மிகவும் கட்டுக்குள் உள்ளதாக தெரவித்தார்.
மேலும், கடந்த ஆண்டில், சுமார் 1.5 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது எனவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்து இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ககன்யான் திட்டத்தைப் பற்றி கூட காங்கிரஸ் சிந்தித்து இருக்காது எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.