செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் பண்புகள் கொண்ட ஒரு வாழ்விடத்தில் தொடர்புடைய பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மே 10 ஆம் திகதி நாசாவின் “மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்” பணி பகுதிக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து 45 நாட்கள் விண்வெளி வீரர்களாக பணியாற்றுவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
அத்துடன் விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளியின் பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன், அவர்களுக்கு தேவையான பூர்வாங்க பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன்
இதன்மூலம் விண்வெளி வீரர்கர் தேவையான அறிவைப் பெறும் வாய்ப்பையும் அவர்கள் பெறுவார்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இந்த குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை விஞ்ஞானி பியுமி விஜேசேகர, கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.