ஈரான் ஜானாதிபதி செய்ட் இப்ராகிம் ரைஸ் மூன்று நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி அவர் இன்று முதல் 24 வரை பாகிஸ்தானில் தங்கியிருப்பார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வெளிநாட்டு ஜானாதிபதி ஒருவர் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனவும் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் செனட் சபாநாயகர் ஆகியோரை சந்திக்க உள்ளதுடன் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் வர்த்தகம், எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே தற்போதுள்ள உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஏப்ரல் 24ஆம் திகதி உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.