திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் களனி, மஹர, தொம்பே ஆகிய இடங்களிலும், மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.