முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை கட்சிக்கு எதிராக மூன்று தடை உத்தரவுகளையும் நீதிமன்றம் இன்றையதினம் பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயற்படுவதையும் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார்.
மேலும், கட்சியின் தற்காலிக தலைமைச் செயலர் எடுத்த முடிவுகளை அமுல்படுத்துவதற்கும் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
அத்துடன் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கமைய கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன்விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் வரையிலும் இந்த இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.