உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை ராஜபக்சர்களே தேற்றுவித்தனர்.
இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக உருவான மனநிலையின் இறுதி வெளிப்பாடுதான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாம் விரிவான விசாரணை மேற்கொள்வோம்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முதலில் கண்டறியப்படவேண்டும்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்தும் அதனை தடுப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இராணுவத்தையும் புலனாய்வு பிரிவையும் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ளமுடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படும் பட்சித்திலேயே
விசாரணை முழுமையடையும்.
அதனை விடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அரசாங்கம் மார்தட்டிகொள்வதில் அர்த்தம் இல்லை” இவ்வாறு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.