வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்” கடந்த 40 வருடங்களாக காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தில், பேரூந்து உரிம மாற்றம் மேற்கொள்ளும் பொழுது சங்க உறுப்பினர்களுக்கிடையில் அறியபடுத்தி வழித்தடத்தில் இருப்பவர்களுக்கிடையில் வழித்தட அனுமதி விற்கப்படுவது சங்கத்தின் யாப்புசார் வழமையாக இருந்து வருகின்றது.
எனினும் குறித்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர், வழித்தடத்தில் அல்லாத அராலி பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வழித்தட அனுமதி பத்திரத்தினை விற்பனை செய்துள்ளார்.
இதுதொடர்பில் விற்பனை செய்வதற்கு முதலே வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு கடிதமூலம் அறியபடுத்தியும் சபை நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆளுநருக்கும் அறிய படுத்தி நடவடிக்கை எடுக்கபடவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆளுநர் சார்பில் வருகை தந்த ஆளுநர் அலுவலக அதிகாரியிடம் மகஜர் ஒன்றினை பேரூந்து சங்க பிரதிநிதிகள் கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.