இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய விஷேட காணொளி பதிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
“வடக்கு – கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். அதிகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே.
சிவராம், நிமலராஜன் போன்றவர்களின் உயிர்களு பறிக்கப்பட்டது.
தற்போது, தமிழ் ஊடகவியலாளர்களே அடிப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
கருத்துச் சுதந்திரத்தை நிறுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் ஊடகத்துறையையும், ஊடவியலாளர்களையுமே தாக்குகின்றனர்.
அதன்படி, ஊடக சுதந்திரதினமான இன்று, வெறுமனே ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பற்றி மட்டும் பேசுவதை தவிர்த்து, நடைமுறையில் உண்மையான சுதந்திரத்தை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரம் மக்களுடைய சுதந்திரமுமாகும்.” என அவர் தெரிவித்தார்.