அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வரும் நிலையில் , இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் எதிர்வரும் 28-ந் திகதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்தாலும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் என்பதோடு, இம்மாதம் 7ஆம் திகதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.