சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலமொன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், 16 வயதுடைய மகன் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், அவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், மொபைல் கேம்ஸ் எனப்படும் தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
16 வயதுடைய குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும், அவரது அறையில் சில வாசகங்கள் இரத்தக் கறையால் எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த 16 வயது சிறுவன், தனது தாயை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எனவே, சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.