கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மற்றுமொரு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பெண் பொலிஸார் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டமை குறித்து கடந்த 4-ம் தேதி கோவை சைபர் கிரைம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கஞ்சா வழக்குத் தொடர்பாக திருச்சி பொலிஸார் இன்று சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தனர்.
இதனையடுத்து சவுக்கு சங்கரை தேனியில் பதிவான கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், தனிப்படைப் பொலிஸார் இன்று காலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை மதுரைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.