2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான தகராறுகளினால் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.