2024ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் மேலும் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பணியகத்தின் முழு மேற்பார்வையின் கீழ் சில வேலைவாய்ப்புகளை, உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சைப்ரஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல புதிய தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் அடுத்த 2 மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.