மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொணடார்.
கல்வி, இலக்கியம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார். இதில், சமூக சேவகருக்கான பத்மபூஷன் விருது மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி முதற்கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், ஏனையவர்களுக்கு 2 ஆவது கட்டமாக நேற்று பத்ம விருதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.