ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜுன் 18 ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம். எனினும், இதுவரை யாரை வேட்பாளராக களமிறக்குது என்பதை தீர்மானிக்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை ஜுன் 18 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பார் என நினைக்கிறேன்.
அவர் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயார் என்றால், இதுதொடர்பாக கட்சி இறுதித் தீர்மானத்தை எடுக்கும். நாட்டுக்காக நாம் எந்தத் தரப்பினருடனும் இணைந்து செயற்படவும், பிரிந்து செயற்படவும் தயாராகவே உள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.