ரஷ்யாவின் பிரதமராக இன்று மைக்கேல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin) மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ரஷ்ய சட்டத்திற்கு இணங்க, கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த 58 வயதான மிஷுஸ்டின், செவ்வாயன்று அமைச்சரவையில் தனது இராஜினாமாவை, சமர்ப்பித்திருந்தார்.
இதனையடுத்து அவர் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினினால் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மிஷுஸ்டினின் மறுநியமனம் அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.