குருநாகல் – குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி தனது காதலியைப் பார்க்கச் சென்ற குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் 11 நாட்களின் பின்னர் சிலாபம் – மாதம்பே பகுதியில் வைத்து அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டிய – வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த இளைஞனின் காதலியின் தந்தையான சிங்கிதி என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
இந்த நிலையில், இந்தக் கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்ஹின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.