விசேட தேவையுடையவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
விசேட தேவையுடையோர் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வாக குறித்த அமர்வு இடம்பெறுகிறது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விசேட தேவையுடையோர் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதாரண பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மனித உரிமைகள் அமைப்பு சார்ந்தவர்கள், விசேட தேவையுடையோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.