”ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் சம்பவத்துடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று சபையில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ரஷ்யாவுக்கு சுமார் 600 முதல் 800 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பலர் எமக்கு அழைப்பினை ஏற்படுத்தி அவர்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அவர்கள் அங்கு சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் வெளிவிவவகார இராஜாங்க அமைச்சர் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும் நாம் அறிவித்துள்ளோம்.
ஆனால், ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையினராக இணைத்துக்கொள்ளப்பட்ட ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் சட்டவிரோதமாகவே அங்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
எனவே இந்த விடயத்தில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் ஒரு விடயத்தை தெரிவித்திருந்தார். தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அங்கு சிக்கியுள்ளவர்களை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்குள் அவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதாக தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் இந்த விடயத்துடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என வினவுகின்றோம்” இவ்வாறு காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.