பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலின் போது ஹமாஸ் அமைப்பினரால் பணையக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களை விடுவித்தால் காசாவில் நாளையேபோர் நிறுத்தம் சாத்தியமாகும் என ஜோபைடன் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜோபைடனின் இக் கருத்துக்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை தாம் கண்டிப்பதாகவும், பல சுற்றுகளாக நடந்து வரும் பேச்சு வார்த்தையில் ஒரு பின்னடைவாக இதை தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.